ஷேர்ஷா படத்தில் நடித்த தன்னை யாருமே கண்டுகொள்ளவில்லை என்று வருத்தப்படுகிறார் சாஹில் வாய்த்.

ஷேர்ஷா

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்த ஷேர்ஷா படம் அண்மையில் அமேசான் பிரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த அனைவரும் விஷ்ணுவர்தனையும், சித்தார்த் மல்ஹோத்ராவையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று பலரும் பரிந்துரை செய்கிறார்கள். இந்நிலையில் அந்த படத்தில் நடித்த ஒருவர் கவலையில் இருக்கிறார்.

சாஹில்

கேப்டன் விக்ரம் பத்ராவாக நடித்த சித்தார்த் மல்ஹோத்ராவின் நெருங்கிய நண்பர் சன்னியாக நடித்தவர் சாஹில் வாய்த். அந்த படத்தில் நடித்தது குறித்து சாஹில் கூறியிருப்பதாவது, ஷேர்ஷா படத்தில் என் கதாபாத்திரம் மிகவும் சிறியது என்று தெரிந்து கொண்டேன். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் விரும்பவில்லை என்றார்.

இயக்குநர்

சாஹில் மேலும் கூறியதாவது, நானும் ராணுவ வீரராக நடிக்க விரும்புகிறேன். எனக்கு அந்த கதாபாத்திரம் கொடுங்கள் என்று இயக்குநரிடம் கேட்டேன். ராணுவ வீரர் உடை அணிந்து போருக்கு செல்ல விரும்பினேன். ஆனால் யாருமே என்னை அந்த கதாபாத்திரத்தில் பார்க்கவில்லை. சன்னி கதாபாத்திரம் தான் உங்களுக்கு சரியாக வரும் என்று இயக்குநர் கூறினார் என்றார்.

நன்றி

பத்ரிநாத் கி துல்ஹனியா, ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா, ஷேர்ஷா என்று தொடர்ந்து எனக்கு வாய்ப்பு அளித்து வரும் தர்மா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஷேர்ஷா பற்றி தான் மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னை போன்று துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்களை பற்றி யாருமே பேசவில்லை. மறைந்த கேப்டன் விக்ரம் பத்ராவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சில நல்ல நடிகர்கள் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்தார்கள். நானும் அப்படித் தான். ஆனால் ஷேர்ஷா படத்தில் நடித்திருக்கக் கூடாது என்பதை தற்போது உணர்கிறேன் என்று சாஹில் தெரிவித்துள்ளார்.