ஹைலைட்ஸ்:

  • வெளியானது உடன்பிறப்பே ட்ரெய்லர்
  • ஜோதிகாவின் 50வது படம் உடன்பிறப்பே

சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கும் உடன்பிறப்பே படம் அக்டோபர் 14ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது.

இது ஜோதிகாவின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. உடன்பிறப்பே படம் தெலுங்கில் ரக்த சம்பந்தம் என்கிற பெயரில் ரிலீஸாகவிருக்கிறது.

ஜோதிகா, சசிகுமார் இடையேயான பாசம் பற்றியது தான் உடன்பிறப்பே. இன்னொரு பாசமலர் போன்று இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பாச போராட்டம் பற்றிய படத்தை சூர்யா தன் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறது என்றால் அது நிச்சயம் குடும்ப ஆடியன்ஸை கவரும் தரமான படமாகத் தான் இருக்கும் என்று சினிமா ரசிகர்கள் நம்புகிறார்கள்.
இந்நிலையில் உடன்பிறப்பே படத்தின் ட்ரெய்லரை இன்று வெளியிட்டுள்ளனர். ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ஜோதிகா கூறியதாவது,

இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். இதுவரை நான் நடித்திராத கதாபாத்திரம். சசிகுமார் சார் என் நிஜமான சகோதரர் போன்று இருந்தார். நான் சமுத்திரக்கனி சாரின் ரசிகை. ஷூட்டிங்கில் சூரியிடம் தான் அதிகம் பேசினேன். என் நண்பர் என்றார்.

கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு சி.எம். ஆகணும்னு பண்ற வேலை இருக்கே: கமலை திட்டிய பிக் பாஸ் 5 போட்டியாளர்