ஹைலைட்ஸ்:

  • யுவனுக்கும் எனக்கும் இடையே அப்படி ஒரு பாசம்- சிம்பு
  • எனக்கென்றால் யுவன் பயங்கரமா வேலை பார்ப்பார்- சிம்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் மாநாடு படம் நவம்பர் 25ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் இன்று நடந்த மாநாடு பட விழாவில் கலந்து கொண்டு பேசினார் சிம்பு.

அவர் பேசியதாவது,

மேடைக்கு வந்ததுமே எமோஷனலாக இருக்கிறது. என் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என் படம்னா ஏதாவது பிரச்சனை வருவது வழக்கமாகிவிட்டது. சுத்தி அவ்வளவு விஷயங்கள் பண்றாங்க. மாநாடு படத்திற்கு நிறைய பிரச்சனை ஏற்பட்டது.

எஸ்.ஜே. சூர்யா நடிச்சு பிச்சுட்டாங்க. எஸ்.ஜே. சூர்யாவுடன் சேர்ந்து வேலை செய்ததில் மகிழ்ச்சி.

யுவன் வந்து நண்பர், எனக்கு அப்பா மாதிரி, எல்லாமே அவர். அது என்ன பாண்டிங் என்றே எனக்கு தெரியவில்லை.

எனக்கென்றால் யுவன் பயங்கரமா வேலை செய்வார். நான் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் தாங்கிப்பார். உங்க நட்சத்திரம், அதெல்லாம் சொல்லுங்க, நான் கல்யாணம் பண்ணினால் அந்த நட்சத்திரம் உள்ள பெண்ணை தான் பண்ணுவேன் என்று சொல்லியிருக்கிறேன்.

ஏனென்றால் என்னை தாங்கிக்கிற இதயமும், என்னை புரிந்து கொள்ளும் இதயமும் நீங்க தான் சார். அந்த அளவுக்கு ஒரு லவ்.

தயவு செஞ்சு ஓவரா நடிக்காதனு நான் இந்த படத்தில் பிரேம்ஜியிடம் அடிக்கடி சொல்வேன். அந்த வசனம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

பெரிய தப்பு பண்ணிட்டேன்: எஸ்.ஜே. சூர்யாவிடம் சாரி சொன்ன பாரதிராஜா