‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் பிரபலமான இயக்குனர் கார்த்திக் நரேன் தற்போது தனுஷ் நடிப்பில் மாறன் படத்தை இயக்கி வருகிறார். இதனிடையில் நவரசா ஆந்தாலாஜி படத்திற்காக அவர் இயக்கியுள்ள ப்ராஜக்ட் அக்னி குறும்படம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இதனிடையில் தன்னுடைய வலைத்தள பக்கத்தில் கார்த்திக் நரேன் பகிர்ந்த பதிவு ஒன்றுக்கு, அவரை பங்கமாய் வைத்து செய்து கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன். முதல் படத்தில் கிடைத்த வரவேற்பால் தனது அடுத்த படைப்பாக நரகாசூரன் படத்தை இயக்கினார். அரவிந்த் சாமி, சந்திப் கிஷன், திரிஷா, ஆத்மிகா நடிப்பில் உருவான இந்தப்படம் இன்றுவரை வெளியாகவில்லை. தற்போது ஓடிடி தளத்தில் இந்த படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து அருண் விஜய், பிரசன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் மிகப்பெரிய பில்டப்பிற்கு மத்தியில் வெளியான இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை முற்றிலுமாக நிறைவேற்றவில்லை. இதனை தொடர்ந்து தற்போது தனுஷ், மாளவிகா மோகனின் நடிப்பில் மாறன் படத்தை இயக்கி வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

எனக்கான ஆண் தேவதை!!: கமலுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த புது மாப்பிள்ளை சினேகன்!
இந்நிலையில் கார்த்திக் நரேன் தனது ட்விட்டர் பக்கத்தில்,பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ‘தான் யாருன்னு காட்ட வேண்டிய நேரம் வந்துடுச்சு’ என ஆர்யா பேசும் காட்சியின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் மாறன் படத்தின் மூலம் கார்த்திக் நரேன் கம்பேக் கொடுக்க போகிறார் என குஷியில் ட்விட் ரிப்ளை பண்ண, மற்றொரு புறம் நெட்டிசன்கள் கார்த்திக் நரேனை பக்கமாய் கலாய்த்து வருகின்றனர்.

கார்த்திக் நரேன் ட்விட்டிற்கு கீழே நெட்டிசன் ஒருவர் ‘நம்ம பேசக்கூடாது. நம்ம படம் தான் பேசணும்’ என கமெண்ட் அடிக்க, மற்றொருவர் ‘படத்த பார்த்துட்டு முடிவு பண்ணுவோம்’ என கலாய்த்துள்ளார். இதே போல் பலரும் மீம் டெம்பிளேட்களால் கார்த்திக் நரேனை கலாய்த்து வருகின்றனர். மற்றொரு பக்கம் தனுஷ் ரசிகர்கள் கார்த்தி நரேனின் மாறன் படத்தை மலைபோல் நம்பி அவருக்கு சப்போர்ட் செய்து ட்விட் செய்து வருகின்றனர்.