ஹைலைட்ஸ்:

  • லூசிஃபர் ரீமேக் தொடர்பாக நயன்தாரா அடம்?
  • நயன்தாராவை சமாதானம் செய்யும் மோகன்ராஜா?

மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிஃபர் மலையாள படத்தை தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து ரீமேக் செய்து வருகிறார் மோகன்ராஜா. அந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறாார்.

நயன்தாராவுக்கு கணவராக சத்யதேவ் என்பவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் சிறிய நடிகருடன் நான் நடிக்க மாட்டேன், அவரை மாற்றுங்கள் என்று மோகன்ராஜாவிடம் நயன்தாரா கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சத்யதேவுடன் நடிக்குமாறு நயன்தாராவிடம் பேசி வருகிறார்களாம். லூசிஃபரில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்த கதாபாத்திரத்தில் தான் சத்யதேவ் நடிக்கிறார்.

மோகன்ராஜாவின் பேச்சை கேட்டு சத்யதேவுடன் நயன்தாரா நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நயன்தாராவை இப்படி ஏமாத்திட்டீங்களே விக்னேஷ் சிவன்?!இதற்கிடையே விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியாகின. ராம்போ விஜய் சேதுபதி, கதிஜா சமந்தா, கண்மணி நயன்தாராவை அறிமுகம் செய்து வைத்தார்கள்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் டிசம்பர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது என்று அறிவித்துள்ளனர். இருப்பினும் இன்னும் ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை.