ஹைலைட்ஸ்:

  • திருமண வீடியோவை வெளியிட்ட அமலா பால்
  • கருப்பு சேலையில் அழகாக இருக்கும் அமலா பால்

நடிகையும், தயாரிப்பாளருமான அமலா பால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அவரின் தம்பி அபிஜித் பாலுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டார்.

இந்நிலையில் தன் தம்பி ரிச்சர்ட் ஜோசபின் திருமணத்தில் கலந்து கொண்டார் அமலா. அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்.

கருப்பு நிற சேலையில் அமலா பால் மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டாவது திருமணம் செய்யும் ஐடியா இல்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இயக்குநர் ஏ.எல். விஜய்யை விவாகரத்து செய்த பிறகு அமலா பால் தன் கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தான் இரண்டாவது திருமண பேச்சை எடுத்துள்ளனர் ரசிகர்கள்.

அமலா பால் அண்மையில் கடற்கரையோரம் பிகினியில் போட்டோஷூட் நடத்தினார். அந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். பிகினி புகைப்படங்களை பார்த்த சமூக வலைதளவாசிகள் அமலா பாலை கிண்டல் செய்ததுடன், விளாசினார்கள்.

அதை பார்த்த அமலா பால் அவர்களுக்கு பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸால் பெரிதும் பாதிக்கப்பட்டேன், குக் வித் கோமாளி தான் பெஸ்ட்: ரம்யா பாண்டியன்