டாக்டர் படத்தில் தன் கதாபாத்திரம் எத்தகையது என்பது பற்றி தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

டாக்டர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டாக்டர் படம் அக்டோபர் 9ம் தேதி அதாவது நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. படத்திற்கான டிக்கெட்டை புக் செய்துவிட்டு அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள் ரசிகர்கள். பெரிய கேப்பிற்கு பிறகு சிவகார்த்திகேயனை மீண்டும் திரையில் பார்க்கும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

சிவகார்த்திகேயன்

நான் சின்னத்திரையில் வேலை பார்த்த காலத்தில் இருந்தே இயக்குநர் நெல்சன் திலீப்குமார் எனக்கு நல்ல நண்பர். நான் 2007ம் ஆண்டு என் டிவி கெரியரை துவங்கினேன். நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியை அவர் இயக்கினார். அவர் மீதான நம்பிக்கையில் தான் டாக்டர் படத்தை தயாரித்திருக்கிறேன் என்கிறார் சிவகார்த்திகேயன்.

கதாபாத்திரம்

எமோஷனை வெளிப்படுத்தாமல் இருக்கும் கதாபாத்திரம் என்னுடையது. எமோஷனை வெளியே காட்டாமல் இருப்பது தான் எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. என் கதாபாத்திரம் எப்பொழுதுமே எமோஷனை காட்டாது. ஆனால் நிஜத்தில் நான் அப்படிப்பட்டவன் இல்லை என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஓடிடி ரிலீஸ்

கொரோனாவின் முதல் அலைக்கு பிறகு டாக்டர் படத்தை தியேட்டர்களில் வெளியிடலாம் என்று காத்திருந்தோம். ஆனால் இரண்டாம் அலை வந்த பிறகு சற்று யோசித்தோம். நான் படத்தை தயாரித்து கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸிடம் கொடுத்தேன். அவர்கள் தான் பிசினஸை கவனிக்கிறார்கள். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள் என்றேன். நல்ல வேளையாக இரண்டாம் அலை அதிக காலம் நீடிக்கவில்லை. அதனால் தியேட்டரில் ரிலீஸ் செய்கிறோம் என்றார் சிவகார்த்திகேயன்.