ஹைலைட்ஸ்:

  • சாய்வாலா நிறுவனத்தில் நயன்தாரா ரூ. 5 கோடி முதலீடு
  • புதுப்புது விஷயங்களில் கவனம் செலுத்தும் நயன்தாரா

நயன்தாரா படங்களில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். தன் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ரௌடி பிக்சர்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களை தயாரித்து வருகிறார்.

மேலும் ரியல் எஸ்டேட்டிலும் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து சாய் வாலா நிறுவனத்தில் ரூ. 5 கோடி முதலீடு செய்திருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் முதலீடு குறித்து அறிந்த ரசிகர்களோ, இனி ‘அவர்’ மட்டும் அல்ல எங்கள் தலைவியும் சாய்வாலா தான் என்று கூறுகிறார்கள்.

கெரியரை பொறுத்தவரை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. அந்த படத்தில் விஜய் சேதுபதி தான் ஹீரோ, சமந்தா மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார். படத்தை அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இது தவிர்த்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியுடன் சேர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. மேலும் தன் நண்பன் அட்லி இயக்கும் பாலிவுட் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அட்லியுடன் சேர்ந்து பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நயன்தாரா.

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இரண்டு பட டீலில் கையெழுத்திட்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு நயன்தாரா ரொம்ப பிசி என்பது குறிப்பிடத்தக்கது.

அடடே, விஜய் சேதுபதி ஒரு ‘சா…. பி’..னு தெரியாமப் போச்சே