தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக ‘கபாலி’ மற்றும் வெற்றிச்செல்வன், தோனி படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் துணிந்து நடித்து வருபவர் ராதிகா ஆப்தே.

கடந்த 2005ம் ஆண்டு இந்தியில் வெளியான வா லைஃப் ஹோ டோ ஹைசி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான ரத்த சரித்திரம் படத்தில் நடித்து பிரபலமானார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்றது.

கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை கலங்களை தேர்வு செய்து நடிக்கும் ராதிகா, ஒரு படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘அண்மையில் ஒரு இயக்குனர் என்னை சந்தித்து அவரது படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். ஏன் இதே போன்ற கதைகளுடன் என்னிடம் வருகிறீர்கள் என கேட்டேன்.

ஆணுறை சம்பந்தமான படத்தில் ரகுல் பிரீத் சிங்: பரபரப்பை ஏற்படுத்தும் பர்ஸ்ட் லுக்!
அதற்கு அவர், நீங்கள் பட்லாபூர், அகல்யா போன்ற படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளீர்கள். அதுமட்டுமின்றி ஏற்கனவே நிர்வாணமாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறீர்கள் தானே என கேட்டார். எனவே என்னுடைய படத்தில் அதே போன்ற கதாபாத்திரம் செய்வீர்களோ என்ற எண்ணத்தில் உங்களை அணுகினேன் என தெரிவித்தார். அதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்திய சினிமாவில் மட்டுமல்ல வெளிநாட்டு படங்களிலும் நிர்வாணமாக நடிப்பது ஒன்றும் தவறல்ல.

கதைக்கு தேவை என்றால் அப்படி நடிக்கலாம். நிர்வாணமாக நடிக்க வைப்பதற்காகவே கண்டபடி கதைகளை கொண்டு வந்தால் எப்படி? நிர்வாணமாகவோ கவர்ச்சியை காட்டவோ மட்டுமே நான் சினிமாவிற்கு வரவில்லை. கதை பிடித்திருந்தால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வேன். கதையே இல்லாமல் உடம்பை காட்டவோ நிர்வாணமாக நடிக்கவோ மாட்டேன்’. இவ்வாறு தெரிவித்துள்ளார் ராதிகா ஆப்தே.

அட ராய் லெட்சுமியா இது; நம்பவே முடியலேயேப்பா!