அண்டை மாநிலத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் மூலம் பிரபலமானவர் அந்த தமிழ் பொண்ணு. நடிப்பில் மட்டும் அல்ல டான்ஸ் ஆடுவதிலும் வல்லவர். அப்படி அவரின் டான்ஸை பார்க்கவே ஒரு கூட்டம் இருக்கிறது.

நடிகை தற்போது அக்கட தேசத்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு தமிழ் பெண்ணை நம் அண்டை மாநில ஆட்கள் எல்லாம் வாய்ப்பு கொடுத்து வாழ வைக்கிறார்களே, கோலிவுட்காரர்கள் ஏன் கண்டுகொள்வது இல்லை என்கிற கேள்வி எழாமல் இல்லை.

நடிகையின் பெயரை சொன்னாலே தமிழ் இயக்குநர்கள் பலர் கடுப்பாகிறார்கள். கதை சொல்ல என் வீட்டிற்கு வாங்க, ஹைதராபாத்துக்கு வாங்க என்று இயக்குநர்களை அலையவிடுகிறாராம். அப்படியே அவரை கஷ்டப்பட்டு சந்தித்து கதை சொன்னால், என் கதாபாத்திரம் வெயிட்டா இல்லையே, அதை மாத்துங்க என்கிறாராம்.

ஹீரோவுக்கு நிகராக என் கதாபாத்திரம் இருக்கும் வகையில் அதை மாற்றி அட்ஜஸ்ட் பண்ணுங்க என்று இயக்குநர்களிடம் கூறுகிறாராம் நடிகை. அவர் சொல்வதை எல்லாம் கேட்டு இயக்குநர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்களாம்.

இதற்கிடையே பட வாய்ப்புக்காக நடிகை அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று சொல்வதால் தான் அவர் மீது வீண் பழி சுமத்துவதாக சிலர் கூறுகிறார்கள்.