ஹைலைட்ஸ்:

  • காதலியை மணந்த நடிகர் ஆண்டனி வர்கீஸ்
  • ஆண்டனி வர்கீஸ், அனிஷாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

லிஜோ ஜோஸ் இயக்கிய அங்கமாலி டைரீஸ் மலையாள படம் மூலம் நடிகரானவர் ஆண்டனி வர்கீஸ். அவரும், அனிஷா பாலோஸ் என்கிற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

அங்கமாலியில் நடந்த நிச்சயதார்த்தத்தில் இருவீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் பிரச்சனையாக இருப்பதால் வேறு யாரையும் அழைக்கவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

அதை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் ஆண்டனி, அனிஷாவை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அனிஷா வெள்ளை நிற கவுனில் அழகாக இருந்தார். அனிஷா வெளிநாட்டில் நர்ஸாக வேலை செய்கிறார். அனிஷாவுக்கும், ஆண்டனி வர்கீஸுக்கும் சிறு வயதில் இருந்தே பழக்கமாம்.

முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவிருந்தார் ஆண்டனி வர்கீஸ். ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போகவே அந்த கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டனி வர்கீஸ் கையில் தற்போது நான்கு மலையாள படங்கள் இருக்கிறது.

Vijay: நடிகர் விஜய்யை பாடாய்படுத்தும் 3 பேர்