ஹைலைட்ஸ்:

  • நீரஜ் சோப்ராவை வாழ்த்தி ட்வீட் செய்த கமல்
  • கமலை கிண்டல் செய்யும் நெட்டிசன்ஸ்

டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார். இதையடுத்து தங்கமன் நீரஜ் சோப்ராவை அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

kamal haasan

இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாசனும் நீரஜ் சோப்ராவை வாழ்த்தி ட்வீட் போட்டார். ஆனால் நீரஜ் சோப்ராவுக்கு பதில் ஷிவ்பால் சிங்கின் புகைப்படத்தை வெளியிட்டார் கமல். அதை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, என்ன ஆண்டவரே போதையா என்று கேட்டு கிண்டல் செய்தார்கள்.
இதையடுத்து அந்த ட்வீட்டை நீக்கிவிட்டு நீரஜ் சோப்ராவின் புகைப்படத்தை வெளியிட்டு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வென்று தடகளத்தில் தங்கம் எனும் இந்தியாவின் நூற்றாண்டுக் கனவை நிறைவேற்றிய இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு என் வாழ்த்துக்கள் என்றார்.

கமல் அந்த ட்வீட்டை நீக்கினாலும், சமூக வலைதளவாசிகள் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து கலாய்க்கிறார்கள். வழக்கமாக நீங்கள் போடும் ட்வீட்டுகளில் தமிழ் தான் புரியாது. இம்முறை ஆளையே மாற்றிவிட்டீர்களே என்று விமர்சிக்கிறார்கள். சோப்ராவுக்கு பதில் சிங்கா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மக்கள் பணிக்கு பிரேக் விட்டு புதுச்சேரிக்கு கிளம்பிய எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்