ஹைலைட்ஸ்:

  • வனிதாவுக்கு 4வது திருமணம் நடந்ததாக பரவிய தகவல்
  • தான் இன்னும் சிங்கிள் தான் என்று சொன்ன வனிதா
  • விமர்சித்த நெட்டிசனுக்கு வனிதா பதில்

வனிதாவுக்கு நடந்த முந்தைய திருமணங்கள் மூலம் ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். லாக்டவுன் நேரத்தில் பீட்டர் பாலுடன் நடந்த திருமணம் பிரிவில் முடிந்தது. பீட்டர் பால் குடிக்கு அடிமையானதால் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார் வனிதா.

இந்நிலையில் அவருக்கும், வட மாநிலத்தை சேர்ந்த பைலட் ஒருவருக்கும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதாக தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. பீட்டர் பாலை பிரிந்த வேகத்தில் அடுத்த திருமணமா என்று ஆளாளுக்கு பேசினார்கள்.

வனிதாவுக்கும், பைலட்டுக்கும் கொல்கத்தாவில் ரகசியமாக திருமணமாகிவிட்டதா?இந்நிலையில் தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று வனிதா ட்விட்டரில் விளக்கம் அளித்தார். அந்த ட்வீட்டில், நான் சிங்கிளாக, available ஆக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அப்படியே தான் இருக்கிறேன். வதந்திகளை பரப்ப வேண்டாம் மேலும் அவற்றை நம்ப வேண்டாம் என்றார் வனிதா.

available என்கிற வார்த்தையை பார்த்த சமூக வலைதளவாசிகளோ வனிதாவை கண்டபடி விளாசத் துவங்கிவிட்டார்கள். இரண்டு வளர்ந்த மகள்களை வைத்துக் கொண்டு வனிதாவுக்கு இன்னும் திருமண ஆசை போகவில்லை என்கிறார்கள்.

வனிதாவின் ட்வீட்டை பார்த்த ஒருவர், available ஆ, என்ன பொம்பள…உங்களுடன் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் என்பது நினைவிருக்கட்டும்..அந்த பிள்ளைகளுக்காகவாவது உங்கள் அசிங்கத்தை நிறுத்துங்கள்…கேவலமாக இருக்கிறது என்றார்.

அந்த நபரின் கமெண்ட்டை பார்த்த வனிதா கூறியிருப்பதாவது,

vanitha

நாம் எல்லாம் பெரியவர்கள். நம் வாழ்க்கை, பொறுப்புகளை கவனிக்க நமக்கு தெரியும்.. எனக்கு தேவைப்படும்போது நீங்களா வந்து என்னை காப்பாற்றப் போகிறீர்கள்…உங்களின் வாழ்க்கையை வாழவும்…நான் ஒரு நடிகை. என் நடிப்பு பிடித்தால் என் படங்களை பார்க்கவும். அவ்வளவு தான். உங்கள் வேலையை மட்டும் பார்க்கவும் என்றார்.

முன்னதாக வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்தபோதும், இரண்டு மகள்களை பற்றி அவர் நினைக்கவே இல்லை என்று சமூக வலைதளவாசிகள் விமர்சித்தார்கள். இந்நிலையில் மீண்டும் அதே விமர்சனம் கிளம்பியிருக்கிறது.