ஹைலைட்ஸ்:

  • மீண்டும் கண்ணீர்விட்ட பாவனி ரெட்டி
  • பாவனி அழுததை பார்த்து கோபம் அடைந்த பார்வையாளர்கள்

பிக் பாஸ் 5 வீட்டில் இருக்கும் பாவனி ரெட்டியின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனால் அதிர்ச்சி அடைந்த பாவனியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு பின்னர் தேறினார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து பாவனியை இறந்து போன கணவரை பற்றி அடிக்கடி பேச வைத்து அழவிட்டு அதை வீடியோவாக வெளியிடுகிறார்கள் என்று பார்வையாளர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
நடந்த விஷயத்தை மறந்து தைரியமாக இரு என்று சொல்வதை விட்டுவிட்டு அந்த பெண்ணை அடிக்கடி அழ வைப்பது சரியில்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலரோ, என்னம்மா எப்ப பார்த்தாலும் இறந்தவரை பற்றியே பேசி அழுகிற. யோவ், பிக் பாஸ் இது சரியில்லை பார்த்துக்கோங்க என்று கடுப்பாகியிருக்கிறார்கள்.
இன்னும் சிலரோ, அந்த அபிஷேக் ராஜாவிடம் இருந்து தள்ளியே இருங்கள் பாவனி ரெட்டி. அவர் உங்கள் பெயரை கெடுத்துவிடுவார் என்று எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே சிலரோ, ப்ரொமோ வீடியோவில் வருவது எபிசோடில் வருவதில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் பயங்கர சண்டை: ஜன்னல், பொருட்களை அடித்து நொறுக்கிய போட்டியாளர்கள்