ஹைலைட்ஸ்:

  • நாக சைதன்யா, அனுஷ்கா பற்றி தீயாக பரவிய வதந்தி
  • மகனுக்கு போன் போட்டு கேள்வி கேட்ட நாகர்ஜுனா

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் நடிகர் நாகர்ஜுனா. இந்நிலையில் அவர் முன்பு பேட்டி ஒன்றில் தன் மகனும், நடிகருமான நாக சைதன்யா பற்றி கூறியது பற்றி தற்போது பேசப்படுகிறது.

அந்த பேட்டியில் நாகர்ஜுனா கூறியதாவது,

படப்பிடிப்புக்காக சுவிட்சர்லாந்துக்கு சென்றிருந்தார் நாக சைதன்யா. அப்பொழுது அவருக்கும், நடிகை அனுஷ்காவுக்கும் நிச்சயமாகிவிட்டதாக வதந்தி பரவியது. அதிகாலையில் நாக சைதன்யாவுக்கு போன் செய்து, மகனே நேற்று இரவு உனக்கும், அனுஷ்காவுக்கும் நிச்சயமாகிவிட்டதாமே. என்னிடம் கூட சொல்லவில்லை என்றேன்.

அதை கேட்ட நாக சைதன்யாவோ, நிஜமாவா என்று கூறி சத்தமாக சிரித்தார். நான் அனுஷ்காவுக்கும் போன் செய்தேன். இருவரும் சிரித்தோம் என்றார்.

நாக சைதன்யாவையும், அனுஷ்காவையும் சேர்த்து வைத்து யார் வதந்தியை பரப்பியது என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் செய்த வேலை இது என்று அனுஷ்கா பின்னர் தெரிவித்தார்.

நாக சைதன்யா சமந்தாவை காதலித்து 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நான்காவது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து அறிவிப்பு வெளியிட்டார்கள்.

கதை சொன்ன இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா: லக்கி மேன்