ஹைலைட்ஸ்:

  • ரூ. 25 லட்சம் வென்ற சமந்தா
  • ஜூனியர் என்.டி.ஆர். நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தா

தானும், காதல் கணவரான நாக சைதன்யாவும் பிரிவதாக அக்டோபர் 2ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார் சமந்தா. அதன் பிறகு நான்காவது திருமண நாளான நேற்று தான் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார்.

விவாகரத்து குறித்து அறிவித்த பிறகு சமந்தா முதல்முறையாக டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கி வரும் எவரு மீலோ கோடீஸ்வருடு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார் சமந்தா.

அந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்னா ஸ்டுடியோஸில் நேற்று நடந்தது. அதில் சமந்தா கலந்து கொண்டாராம். பிற பிரபலங்களை போன்றே சமந்தாவும் ரூ. 25 லட்சம் ஜெயித்திருக்கிறாராம்.

சமந்தா கலந்து கொண்ட எபிசோட் தசரா பண்டிகை ஸ்பெஷலாக அக்டோபர் 15ம் தேதி ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் சமந்தாவின் குழுவை சேர்ந்த சாதனா சிங், ப்ரீத்தம் ஜுகல்கர் ஆகியோர் செட்டில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

எவரு மீலோ கோடீஸ்வருடு நிகழ்ச்சியின் இந்த சீசனில் திரையுலக பிரபலங்களாக கலந்து கொண்டிருக்கிறார்கள். முன்னதாக ராம் சரண், இயக்குநர் ராஜமவுலி, கொரடலா சிவா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அடடா, இரவானால் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா!?