ஏலத்திற்கு முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் மயங்க் அகர்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தங்கள் அணியில் தக்க வைத்துக் கொண்டது. ஏலத்தின் போது, அவர்கள் ஷிகர் தவான், ககிசோ ரபாடா, ஜானி பேர்ஸ்டோ, ராகுல் சாஹர், ஷாருக் கான் மற்றும் ஹர்பிரீத் பிரார் போன்ற வீரர்களை வாங்கினார்கள்.
RCB க்காக, அவர்கள் போட்டிக்கான தங்கள் அணியில் மூன்று வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டனர். விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகியோரை தக்கவைத்துக் கொண்டனர். ஏலத்தின் போது, RCB முக்கியமான வீரர்களான ஃபாப் டு பிளெசிஸ், ஹர்ஷல் படேல், வைனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரை வாங்கியது.
முதலில் பேட் செய்து பஞ்சாப் 6 முறை வெல்ல ஆர்சிபி 7 முறை வென்றுள்ளது. இலக்கை விரட்டியதில் பஞ்சாப் 9 முறையும் ஆர்சிபி 6 முறையும் வென்றது.
ராயல் சாலஞ்சர்ஸ் உத்தேச லெவன்:
ஃபாஃப் டு பிளெசிஸ்
விராட் கோலி
அனுஜ் ராவத்
ஃபின் ஆலன்
தினேஷ் கார்த்திக்
மஹிபால் லோமரோர்
வனிந்து ஹசரங்க
ஹர்ஷல் படேல்
ஷாபாஸ் அகமது
ஷெர்பேன் ரதர்ஃபோர்ட்
முகமது சிராஜ்.
பஞ்சாப் கிங்ஸ் லெவன்:
ஷிகர் தவான்
மயங்க் அகர்வால்
ஜிதேஷ் சர்மா அல்லது பிரப்சிம்ரன் சிங்
லியாம் லிவிங்ஸ்டன்
ஷாரு கான்
ஒடியன் ஸ்மித்
ஹர்ப்ரீத் ப்ரார்
சந்தீப் சர்மா
ககிசோ ரபாடா
அர்ஷ்தீப் சிங்
ராகுல் சாஹர்
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.