இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ‘ஆனந்தம் விளையாடும் வீடு‘ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது சேரன் கால் இடறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பானடவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் சேரன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவருக்கும், லாஸ்லியாவுக்குமான தந்தை, மகள் பாசம் பார்வையாளர்கள் அனைவரையும் நெகிழ செய்தது. பிக்பாஸ் விட்டு வெளிய வந்த பிறகு இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சேரன், ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவ்வப்போது பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில் நந்தா பெரியசாமி கவுதம் கார்த்திக் நடிப்பில் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக ஷிவத்மிகா ராஜசேகர் நடித்து வருகிறார். இவர்களுடன் சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என பெரும் நடச்சத்திர பட்டாளமே நடித்து வருகினறனர்.

‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை வந்தடைந்த பிரபல மலையாள நடிகர்!
இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. வீடு ஒன்று இந்த படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற போது நடிகர் சேரன் கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த நடிகர் சேரனுக்கு எட்டு தையல்கள் போடப்பட்டுள்ளன. ஆனாலும் தொடர்ச்சியாக தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து கொடுத்துள்ளார் சேரன்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்பியுள்ளனர் படக்குழுவினர். இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் ரங்கநாதன் தயாரிக்கிறார். விரைவில் படத்தின் டிரெய்லர், இசை மற்றும் படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.