9 இயக்குநர்கள், 9 குறும்படங்கள் என பிரம்மாண்டமாக ‘நவரசா‘ எனும் தலைப்பில் உருவான ஆந்தாலாஜி திரைப்படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வெளியானது. மணிரத்னம் தயாரித்துள்ள இந்த வெப்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

சென்ற லாக்டவுனில் புத்தம் புது காலை, பாவக்கதைகள், குட்டி ஸ்டோரி உள்ளிட்ட ஆந்தாலஜி திரைப்படங்கள் வரிசையாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதனால் பல இயக்குனர்கள் ஆந்தாலாஜி திரைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினார்கள். அந்த வரிசையில் இயக்குனர் மணிரத்னம் ஜெயேந்திர பஞ்சாபகேசனுடன் இணைந்து நவரசா ஆந்தாலஜி மூவியை உருவாக்கியுள்ளார்.

கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், வஸந்த் சாய், கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன் பிரசாத் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் 9 குறும்படங்களை இயக்கியுள்ளனர்ர். இதில், சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பிரசன்னா, சித்தார்த், பார்வதி, ரோகிணி, ரித்விகா, யோகி பாபு, பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த 9 கதைகளில் நடித்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது நவரசா.

பிரபல பாடலாசிரியர் இயக்கத்தில் நடிக்கும் பிரபுதேவா: விரைவில் படப்பிடிப்பு துவக்கம்!
நவரசாவில் சயின்ஸ் ஃபிக்சன் பாணியில் ‘ப்ராஜக்ட் அக்னி’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன். இந்தக் கதையில் அரவிந்த்சாமி, பிரசன்னா, சாய் சித்தார்த், பூர்ணா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த குறும்படத்திற்காக பலரும் கார்த்திக் நரேனை வெகுவாகப் பாராட்டியிருந்தநர. மேலும், இதைப் முழுநீள படமாக இயக்க வேண்டும் என்றும் கார்த்திக் நரேனிடம் சிலர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் ‘ப்ராஜக்ட் அக்னி’ குறித்து இயக்குனர் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ப்ராஜக்ட் அக்னி’ படத்துக்கு மாபெரும் வரவேற்பை அளித்த பார்வையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் மனமார்ந்த நன்றி. விஷ்ணு, கிருஷ்ணா, கல்கி ஆகியோரின் பயணங்கள் இப்போதுதான் தொடங்கியுள்ளன என குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களின் வேண்டுகோளின் படி ‘ப்ராஜக்ட் அக்னி’ படமாக போவதையே கார்த்திக் நரேன் இவ்வாறு சூசகமாக தெரிவித்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.