முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படத்தில் அஜித் பயன்படுத்திய பைக் பற்றி பேசியிருக்கிறார் நடிகர் சம்பத் ராவ்.

தீனா

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அஜித், லைலா உள்ளிட்டோர் நடித்த தீனா படம் கடந்த 2001ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் இருந்து தான் அஜித்தை அனைவரும் தல என்று அழைக்கத் துவங்கினார்கள். தீனா அஜித்துக்கு மட்டும் அல்ல முருகதாஸுக்கும் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்த படமாகும்.

பைக்

தீனா படத்தில் அஜித்துடன் இருக்கும் அடியாட்களில் ஒருவராக நடித்தவர் சம்பத் ராவ். அந்த படம் மூலம் தான் மக்களுக்கு தன்னை அடையாளம் தெரிந்ததாக சம்பத் ராவ் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். தீனாவில் அஜித் பயன்படுத்திய பைக் சம்பத் ராவுடையது. அந்த பைக்கிற்கு என்ன ஆனது என்பது குறித்து தெரிவித்துள்ளார் சம்பத் ராவ்.

பணக் கஷ்டம்

அஜித் பயன்படுத்திய பைக்கை விற்றுவிட்டதாக சம்பத் ராவ் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டு வாடகை கொடுக்கக் கூட பணம் இல்லாமல் போய்விட்டதாம். அதனால் வேறு வழியில்லாமல் அந்த பைக்கை விற்று வாடகையை கட்டினாராம் சம்பத் ராவ்.

வலிமை, தல 61

-61

அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகப் போகிறது. வலிமையை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தல 61 படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். அந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்கவிருக்கிறதாம்.