ஹைலைட்ஸ்:

  • நடிகை கவிதாஸ்ரீ கைது
  • பண்ணை வீட்டில் இளம்பெண்களை வைத்து பார்ட்டி

ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா, எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காதலன் படத்தில் போலீஸாக நடித்தவர் கவிதாஸ்ரீ. என்ன பெரபு என்று பிரபுதேவாவை டார்ச்சர் செய்வார். அவர் கிழக்கு கடற்கரை சாலை கானாத்தூரில் இருக்கும் பண்ணை வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார்.

சினிமா படப்பிடிப்புக்கு என்று கூறி பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பெண்களை வைத்து இரவு நேரத்தில் சிறப்பு பார்ட்டி நடத்தியிருக்கிறார். அந்த பார்ட்டியில் பங்கேற்க ரூ. 1,599 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று விளம்பரம் செய்தாராம்.

பெண்களுக்கு மட்டும் அனுமதி இலவசம் என்று கூறியிருக்கிறார். இரவு நேரத்தில் நடந்த அந்த பார்ட்டிகளின்போது பெண்களை ஏலத்தில் விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பண்ணை வீட்டிற்கு சென்று கவிதாஸ்ரீயை கைது செய்தனர். 11 இளம்பெண்கள், 15 ஆண்களையும் போலீசார் வளைத்துப் பிடித்துள்ளனர். ஆண்கள் அனைவரும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

பண்ணை வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆபாச படம் எடுத்த வழக்கில் பிரபல நடிகையின் கணவர் கைது