ஹைலைட்ஸ்:

  • ஓணம் ஸ்பெஷல் போட்டோ வெளியிட்ட கல்யாணி ப்ரியதர்ஷினி
  • கல்யாணியின் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிட்ட பிரேம்ஜி

நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனுக்கு வயசு ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் இன்னும் மொரட்டு சிங்கிளாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவருக்கு பெண் பார்த்து வருவதாக கூறப்படுகிறது. ட்விட்டரில் எந்த நடிகை தன் புகைப்படத்தை வெளியிட்டாலும் உடனே வாய் பிளந்து பார்க்கும் ஒரு GIF வீடியோவை கமெண்ட் பாக்ஸில் போடுகிறார் பிரேம்ஜி அமரன்.

இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் சேலை அணிந்திருக்கிறார். தான் சேலையில் அழகாக இருக்கும் புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்த பிரேம்ஜி அமரனோ, தான் வழக்கமாக வெளியிடும் வீடியோவை வெளியிட்டார்.
பிரேம்ஜியின் வீடியோவை பார்த்த கல்யாணி சும்மா இல்லாமல், இதை எதிர்பார்த்தேன் என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.
பிரேம்ஜி அமரனுக்கு எப்போத் தான் கல்யாணம் நடக்கும் என்று அவரின் அண்ணன் வெங்கட் பிரபுவிடம் பலரும் கேட்டு வருகிறார்கள்.

பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம்: பொண்ணு நம்ம குக் வித் கோமாளி…இந்நிலையில் பிரேம்ஜிக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்கும். குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழுடன் தான் திருமணம் என்று நடிகை ஆர்த்தி காமெடியாக தெரிவித்திருக்கிறார்.