ஹைலைட்ஸ்:

  • பவர்ஸ்டார், வனிதாவின் மணக்கோல போட்டோ வைரல்
  • வனிதாவுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்த வனிதா பற்றி அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. அவரின் தனிப்பட்ட வாழ்க்கை, யூடியூப் வீடியோக்களுக்காக பேசப்படுகிறார். லாக்டவுன் நேரத்தில் வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்தார். ஆனால் பீட்டர் குடிக்கு அடிமையானதை பார்த்த வனிதா அவரை பிரிந்துவிட்டார்.

3வது திருமணம் துவங்கிய வேகத்தில் இப்படி முடிந்துவிட்டதே அக்கா என வனிதாவின் ஆதரவாளர்கள் கவலைப்பட்டார்கள்.

இந்நிலையில் வனிதாவுக்கும், வட இந்தியாவை சேர்ந்த விமானி ஒருவருக்கும் கொல்கத்தாவில் இருக்கும் காளி கோவிலில் வைத்து ரகசியமாக திருமணம் நடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து தனக்கு மீண்டும் திருமணம் நடக்கவில்லை என்று வனிதா விளக்கம் அளித்தார்.
தற்போது அவர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்தாலே இது படத்தின் விளம்பரத்திற்காகத் தான் என்பது தெரிகிறது. இருப்பினும் வனிதாவின் 4வது கணவர் பவர்ஸ்டார் என்று சமூக வலைதளவாசிகள் கூறுகிறார்கள்.

வனிதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். இந்த திருமணமாவது நிலைத்து நிற்கட்டும். உங்களுக்கு திருமணம் நடந்தது பவர்ஸ்டார் பொண்டாட்டிக்கு தெரியுமா?
லிஸ்ட்டு பெருசா போகிறதே. இது பட விளம்பரமாக இருக்கும் என்று நம்புகிறோம். நிஜமாக இருந்தால் பவருக்கு ஃபியூஸ் போயிடும் என்பதில் சந்தேகமே இல்லை. விளம்பரம் தேட இப்படி எல்லாமா செய்வது என்று தெரிவித்துள்ளனர்.

விஜய் டிவி பிரபலத்துடன் நடிக்கும் வனிதா: யார்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க

வனிதா தற்போது கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் சிவப்பு மனிதர்கள் படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார். மேலும் வாசுவின் கர்ப்பிணிகள் படத்தில் நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத்துடன் சேர்ந்து நடிக்கிறார். அந்த படத்தில் வனிதாவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.