சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு‘ படத்தில் நடித்துள்ளார் சிம்பு. கடந்த பொங்கலுக்கு சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்திற்கு பிறகு நீண்ட காலமாக இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் ’பாகுபலி 2’ படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்த நிறுவனத்துடன் ‘மாநாடு’ தயாரிப்பாளர் கைகோர்த்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

‘மாநாடு’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி நடித்துள்ளார். இவர் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில் ‘மாநாடு’ படத்தின் ‘மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடி இருந்தனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் துவங்கியது.

‘ஜெய் பீம்’ பட விவகாரம்: சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கும் திரையுலகினர்!
இந்நிலையில் ‘மாநாடு’ படத்தை அமெரிக்காவில் கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தான் ஏற்கனவே ’பாகுபலி-2 படத்தை’ அமெரிக்காவில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘மாநாடு’ படத்தை அமெரிக்காவில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வெளியிட கிரேட் இந்தியா பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

‘மாநாடு’ படத்தில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. அரசியல் மாநாடு ஒன்றில் நடக்கும் அதிரடியான திருப்பங்கள் கொண்ட நிகழ்வுகளை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘மாநாடு’ படம் நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘அண்ணாத்தே’யில் சிவா சொல்லி அடித்துள்ளார் ; படம் மிகப்பெரிய வெற்றி – ரஜினிகாந்த் புகழாரம்!