என் மாமா மனோஜ் என் முதல் இரவை கெடுத்துவிட்டார் என்று பாடகரும், இசையமைப்பாளருமான ராகுல் வைத்யா தெரிவித்துள்ளார்.

ராகுல் வைத்யா

பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான ராகுல் வைத்யாவுக்கும், இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் திஷா பார்மருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் தெரிவித்து ஜூலை 16ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். ராகுல், திஷா திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

முதல் இரவு

திருமணத்தை அடுத்து நடந்த நிகழ்ச்சியில் ராகுல் வைத்யா மேடையில் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ராகுல் கூறியதாவது, இன்று காலை என் மாமா என் அறைக்கு வந்தார். காலை 8 மணியில் இருந்து அவர் என் அறையில் தான் இருந்தார். அது என் முதல் இரவு நாள். இது குறித்து உங்களிடம் சொல்ல விரும்புகிறேன் என்றார்.

javascript-Instagram

மாமா

ராகுல் வைத்யா மேலும் கூறியதாவது, எனக்கு இரண்டு கசின், ஸ்ரேயாஸ் மற்றும் அர்பித். அவர்கள் என்னுடன் பார்ட்டி பண்ணினார்கள். அவர்களை என் அறைக்கு வருமாறு கூறினேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை, அவர்களுன் என் மாமா மனோஜும் காலை 3 மணிக்கு என் அறைக்கு வந்தார். முதல் இரவு நடந்து கொண்டிருந்தது என்றார்.

மனைவி

நம் அறையில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று மனைவி திஷா கேட்டார். ஆமாம் என்றேன். என் முதல் இரவை கெடுத்த அந்த புண்ணியவான்கள் இவர்கள் தான் என்று மாமாவை கை காட்டினார் ராகுல் வைத்யா. அவர் கூறியதை கேட்டு பலரும் சிரித்தார்கள். இதற்கிடையே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ராக்கி சாவந்த் திஷாவுக்கு வைர நெக்லஸ் பரிசளித்திருக்கிறார்.