நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை பார்தி சிங்.

பார்தி சிங்

பிரபல நகைச்சுவை நடிகர் பார்த் சிங் மனிஷ் பாலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் தான் நடிக்க வரும் முன்பு பட்ட கஷ்டம், நடிக்க வந்த பிறகு நடப்பது குறித்து விரிவாக தெரிவித்திருக்கிறார். பார்தி சிங் மனிஷ் பாலிடம் கூறியதாவது, ஒருவர் என் பின்னால் தடவினார். அவர் விளையாட்டுக்காக செய்கிறாரா இல்லையா என்பது கூட தெரியவில்லை என்றார்.

மோசம்

என் நிகழ்ச்சி முடிந்ததும் பார்தி அருமை, அருமை என்று கூறி என் பின்னால் தடவுவார். எங்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தான் இப்படி தடவியது. உங்களின் நடிப்பு அருமை பார்தி என்று கூறிக் கொண்டே பின்னால் தடவுவார்கள். அது நல்லது இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர் என் அங்கிள் போன்றவர், தவறாக நடக்க மாட்டார் என்று நினைத்தேன். ஒரு வேளை நான் தான் தவறாக இருக்கிறேன் என்று நினைத்தேன் என பார்தி கூறினார்.

இருக்காது

பின்னால் தொடுவது சரியில்லை. ஆனால் அங்கிள் தவறாக நடந்து கொள்ள மாட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் தற்போது என் கவுரவம், உடம்பிற்காக போராடும் தைரியம் இருக்கிறது. என்ன விஷயம், என்ன பார்க்கிற, வெளியே போ என்று சொல்லும் அளவுக்கு வந்துவிட்டேன். முன்பு அந்த தைரியம் இல்லாமல் இருந்தது என்றார் பார்தி சிங்.

வறுமை

நான் நடிக்க வரும் முன்பு என் வீட்டில் வறுமை மட்டுமே இருந்தது. சாப்பிட போதிய உணவு இருக்காது. பல நாட்கள் சப்பாத்தியும், உப்பும் வைத்து சாப்பிட்டிருக்கிறோம். தற்போது காய்கறி வாங்கி சாப்பிடும் அளவுக்கு பணம் இருக்கிறது. ஒரு காலத்தில் காய்கறி எல்லாம் கனவாக இருந்தது என்று மனிஷிடம் கூறினார் பார்தி.