Memes
oi-Jaya Chitra
சென்னை: வெயிலை நினைத்தால் வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது. போதாக்குறைக்கு சமூகவலைதளங்களில் வெயில் பற்றிய மீம்ஸ்கள் இன்னமும் கண்ணைக் கட்ட வைக்கின்றன.

அக்னி நட்சத்திரம் என்னவோ அடுத்த மாதம்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் இப்போதே வெயில் சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது. ‘இது வெறும் டிரைலர்தான்..’ என்பது போன்ற நாளுக்கு நாள் கோடையின் தாக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பதையே அதிகம் விரும்புகின்றனர்.

வேறு வழியில்லாமல் வேலை நிமித்தம் வெளியில் செல்பவர்கள் நிலைமைதான் பாவம். முன்பெல்லாம் சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் இருக்கும். கொஞ்சம் அந்த நிழலில் ஒதுங்கி இளைப்பாரிக் கொள்ளலாம். ஆனால் நிலைமை இப்போது அப்படியில்லை. இப்போது வெயிலுக்கு இதமாக சிறுது நேரம் ஓய்வெடுக்க நினைத்தால், ஆபத்பாந்தவனாக உதவுவது ஏடிஎம்கள் தான்.

ஒரு சில ஏடிஎம்களில் ஏசிக்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்பது வேறு கதை. ஆனாலும் நீண்டதூரம் பணி நிமித்தம் பயணம் செய்பவர்கள் சரியாக எந்தெந்த ஏடிஎம்கள் குளுகுளுவென இருக்கும் என்ற தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். பணம் எடுப்பது மாதிரி, பேலன்ஸ் செக் செய்வது மாதிரி என ஏடிஎம்களுக்குள் சென்று சிறிதுநேரம் இளைப்பாறிக் கொள்வார்கள்.

வெயிலின் கொடுமையோடு இதையும் சேர்த்து சில ஜாலி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக சில ஜாலியோ ஜிம்கானா மீம்ஸ்கள்…
English abstract
Those are some jolly memes assortment on summer time warmth.
Tale first printed: Friday, April 22, 2022, 15:11 [IST]