ஹைலைட்ஸ்:

  • நடிகை ஷாலு சௌராசியாவின் செல்போனை பறித்துச் சென்ற வாலிபர்
  • வாலிபர் தாக்கியதில் ஷாலு காயம்

தெலுங்கு நடிகை ஷாலு சௌராசியா ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் கே.பி.ஆர். பார்க்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணி அளவில் வாக்கிங் சென்றிருக்கிறார்.

அப்பொழுது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஷாலுவை மிரட்டி பணம், நகையை கேட்டிருக்கிறார். ஷாலு எதிர்க்கவே அவரை முகத்தில் குத்திவிட்டார். மேலும் கல்லால் அவரை தாக்க முயன்றார். பின்னர் ஷாலுவின் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார் அந்த வாலிபர்.

வாலிபர் தாக்கியதில் ஷாலுவின் தலை, கண் அருகே காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

பார்க்கில் நடந்தது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஷாலு. அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.

சம்பவம் நடந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவானதை சோதனை செய்து வருகிறார்கள். வாக்கிங் சென்ற இளம் நடிகை தாக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தல 61 பற்றி வேற லெவல் அப்டேட்: இதை சத்தியமா எதிர்பார்க்கல தல