பாலா இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

சூர்யா

நந்தா, பிதாமகன் ஆகிய படங்களை அடுத்து மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. பல ஆண்டுகள் கழித்து பாலா அண்ணன் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று சூர்யா அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார். பாலா படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நலையில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்குமாறு கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது.

கீர்த்தி சுரேஷ்

தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேர்கிறார் கீர்த்தி என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. மேலும் பாலா இயக்கத்தில் கீர்த்தி நடிப்பது இது தான் முதல் முறை ஆகும். பாலா படத்தில் கீர்த்தி நடிக்கிறாரா என்று விசாரித்தபோது, அந்த தகவலில் உண்மை இல்லை என்றும், பிற நடிகர், நடிகைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிய வந்தது.

அண்ணாத்த

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸாகி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கரில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தங்கையாக நடித்து வருகிறார் கீர்த்தி.

தளபதி 66

-66

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 66 படத்தில் கீர்த்தி தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது. அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருக்கிறது. பைரவா, சர்கார் ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறார் கீர்த்தி.