ஹைலைட்ஸ்:

  • மாலத்தீவுகளுக்கு சென்றிருக்கும் பூஜா ஹெக்டே
  • பிகினி புகைப்படங்கள், வீடியோ வெளியிட்ட பூஜா

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. படத்தின் முக்கியமான ஷெட்யூலை முடித்துக் கொடுத்த பூஜா, ரிலாக்ஸ் செய்ய மாலத்தீவுகளுக்கு சென்றிருக்கிறார்.

மாலத்தீவுகளுக்கு செல்லும் நடிகைகள் அனைவரும் பிகினி அணிந்து புகைப்படம், வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். இந்நிலையில் பூஜாவும் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவர் பிகினியில் பாப் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி வைரலாகிவிட்டது.
பூஜாவின் பிகினி டான்ஸ் வீடியோவை பலரும் ஷேர் செய்திருக்கிறார்கள்.

கெரியரை பொறுத்தவரை பிரபாஸுடன் சேர்ந்து பூஜா நடித்த ராதே ஷ்யாம் படம் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. மேலும் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்திலும் நடித்திருக்கிறார் பூஜா. அந்த படம் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி ரிலீஸாகிறது.

திரிவிக்ரம் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் பூஜா என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவை விட கவனம் செலுத்த நிறைய வேலை இருக்கு: அன்புமணிக்கு பாரதிராஜா கடிதம்