ஹைலைட்ஸ்:

  • பிக் பாஸால் பெரிதும் பாதிக்கப்பட்டேன்- ரம்யா பாண்டியன்
  • குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிடிக்கும்- ரம்யா பாண்டியன்

பெரிய திரை பிரபலங்கள் தங்களின் கெரியர் பிக்கப் ஆகும் என்கிற நம்பிக்கையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். ரம்யா பாண்டியனும் பட வாய்ப்புகளை எதிர்பார்த்து பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவர் தன்மையாக நடந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரின் கெரியர் பிக்கப்பானதாக தெரியவில்லையே என ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் ரம்யா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறியதாக வெளியான செய்திகளில் கூறப்பட்டிருப்பதாவது,

பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்து தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனால் அந்த நிகழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டேன். பிக் பாஸை விட குக் வித் கோமாளி தான் சிறந்தது. எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியும் கூட. காமெடியுடன் ஜாலியாக செல்லும். ரசிகர்களும் தங்களின் வெறுப்பை காட்ட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ரம்யா பாண்டியன் நடித்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் அண்மையில் அமேசான் பிரைமில் வெளியானது. படம் பார்த்தவர்கள் ரம்யாவின் நடிப்பை பாராட்டினார்கள். அந்த படத்தை சூர்யா தன் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

வயதான காலத்தில் காதலருடன் ஓட்டம் பிடித்த அப்பத்தா: அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள்