ஹைலைட்ஸ்:

  • நயன்தாரா தயாரிப்பில் நடிக்கும் கவின்
  • லிப்ட் படத்திற்கு அமோக வரவேற்பு

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். அவர் நடித்த லிப்ட் படம் அக்டோபர் 1ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸானது. படம் பார்த்த ரசிகர்கள் கவினின் நடிப்பை பாராட்டினார்கள்.

இனி சில நாட்களுக்கு லிப்டில் செல்லும்போது கவின் படம் தான் நினைவுக்கு வரும் என்கிறார்கள். கவின் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் உதவியாளராக இருக்கிறார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் நல்ல படங்களாக தயாரிக்கவும் செய்கிறார். கவின் ஹீரோவாக நடிக்கும் படத்தை புதுமுகம் ஒருவர் இயக்குகிறாராம். அந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

கவின், வாணி போஜன் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாணி போஜன் தொடர்ந்து வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கவின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால் நிச்சயம் வித்தியாசமான கதையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா தயாரிப்பில் கவின் நடிக்கிறார் என்று அவரின் ரசிகர்கள் பெருமயாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

விவாகரத்து செய்தியை கேட்டதில் இருந்தே எனக்கு…: சமந்தா தந்தை உருக்கம்

முகில் படம் டீசர்: என்ன கதைகளமாக இருக்கும்! ஒரு அலசல்!