ஹைலைட்ஸ்:

  • சித்தார்த் சுக்லாவுடன் வேலை செய்த விஷால் கோடியான்
  • பிக் பாஸ் 15 வீட்டில் இருக்கும் விஷால்

பிக் பாஸ் 15 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பவர் விஷால் கோடியான். அவரும் அண்மையில் மறைந்த நடிகர் சித்தார்த் சுக்லாவும் சேர்ந்து ஜீனா ஜரூர் ஹை க்யா என்கிற இசை வீடியோவில் வேலை செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சித்தார்த் பற்றி விஷால் கூறியிருப்பதாவது,

சித்தார்த் சுக்லாவின் கடைசி ப்ரொஜெக்ட் என்னுடன் தான் என்று யாருக்கும் தெரியாது. அது ஒரு இசை வீடியோ. அந்த பாடலில் நானும், சித்தார்த்தும் சகோதரர்கள். சித்தார்த் உயிருடன் இருந்திருந்தால் அந்த வீடியோவை பிக் பாஸ் 15 வீட்டில் அறிமுகம் செய்து வைத்திருப்போம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிருடன் இல்லை.

sidharth shukla

ஒரே பெண்ணை காதலிக்கும் சகோதரர்கள் பற்றிய பாடல் அது. சித்தார்த் சுக்லாவின் கடைசி வீடியோ அது. கடவுள் அவரை எடுத்துக் கொண்டார் என்பதை நினைத்து வேதனையில் இருக்கிறேன். சித்தார்த் உயிருடன் இருந்திருந்தால் பிக் பாஸ் வீட்டில் அவரை சந்தித்து, கட்டிப்பிடித்திருப்பேன். நான் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றதற்கு சித்தார்த் சுக்லாவும் ஒரு காரணம் என்றார்.

பிக் பாஸ் 14 டைட்டிலை வென்ற சித்தார்த் சுக்லா கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். 40 வயதான சித்தார்த் ஆரோக்கியமாக இருந்தார். அப்படி இருந்தபோது அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்பதை பலராலும் நம்ப முடியவில்லை.
பிக் பாஸ் வீட்டில் பயங்கர சண்டை: ஜன்னல், பொருட்களை அடித்து நொறுக்கிய போட்டியாளர்கள்

பாலிவுட் ஸ்டார் ரன்பீர் கபூரின் thumbs up – வைரலாகும் வீடியோ!