ஹைலைட்ஸ்:

  • பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் க்ரித்தி ஷெட்டி?
  • க்ரித்தி ஷெட்டியை பரிந்துரை செய்த நாகர்ஜுனா

17 வயதே ஆகும் நடிகை க்ரித்தி ஷெட்டி தான் தெலுங்கு திரையுலகில் அதிகம் கவனம் ஈர்த்தவராக இருக்கிறார். அவர் நடித்த முதல் படமான உப்பேனா கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு இடையே வெளியாகி ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து அவர் நிதின், ராம் போதினேனி, நாக சைதன்யா, நானி, சாய் தரம் தேஜ் ஆகியோரின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அவரை தமிழ் படங்களில் பார்க்க கோலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்நிலையில் க்ரித்தி ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.

நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனின் பைலட் எபிசோடில் தான் க்ரித்தி கலந்து கொள்கிறாராம். அவரை ஒப்பந்தம் செய்யச் சொன்னதே நாகர்ஜுனா தான் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் புது சீசன் செப்டம்பர் மாதம் 5ம் தேதி அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது. ஆனால் பைலட் எபிசோடில் க்ரித்தி ஷெட்டி வருவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் வரும் சில நிகழ்ச்சிகளை விளம்பரம் செய்ய க்ரித்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்ததாக செய்திகள் வெளியாகின. டிவி நிகழ்ச்சிகளை விளம்பரம் செய்ய க்ரித்திக்கு ரூ. 1.5 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.

என்னமா நடிக்கிறனு திட்டிய லிங்குசாமி, அழுது கொண்டே ஓடிய விஜய் சேதுபதி ‘மகள்’க்ரித்தி தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ராம் போதினேனி ஜோடியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பின்போது க்ரித்தி நடிப்பு பிடிக்காமல் லிங்குசாமி அவரை திட்டினாராம். இதையடுத்து க்ரித்தி அழுது கொண்டே கேரவனுக்கு சென்றாராம்.