தான் மகள் அகிராவுக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஸ்ருதி நகுல் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நகுல்

ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படம் மூலம் நடிகரானவர் தேவயானியின் தம்பி நகுல். அவர் நடிப்பது தவிர்த்து பாடல்களும் பாடி வருகிறார். விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருக்கிறார் நகுல். நகுல் தன் நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

தாய்ப்பால்

கர்ப்பமாக இருந்த ஸ்ருதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி அகிரா என்கிற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். water birthing முறை மூலம் குழந்தையை பெற்றார். பிரசவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நகுல் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இந்நிலையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்து ஸ்ருதி பாஸ்கர் பேசியிருக்கிறார். பிரசவ வீடியோ மற்றும் தன் மகளுக்கு தான் தாய்ப்பால் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

javascript-Instagram

ஸ்ருதி

ஸ்ருதி கூறியதாவது, அகிராவுக்கு ஓராண்டு காலமாக தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். தாய்ப்பால் என்பது பாலையும் தாண்டியது. இது தாய் மற்றும் பிள்ளைக்கு இடையேயான வித்தியாசமான பந்தம். மேலும் உங்களின் மார்பகத்தின் அளவு முக்கியமில்லை. மேலும் பாத்ரூம் போகாமல் அடக்கி வைக்க வேண்டாம். இரண்டு நிமிடங்கள் குழந்தை அழுதாலும் பரவாயில்லை. பாத்ரூம் பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

javascript-Instagram

அம்மாக்கள்

சில தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதை ரசிக்க மாட்டார்கள. சிலர் ஃபார்முலாக்களை பயன்படுத்துகிறார்கள். அது பரவாயில்லை. உங்களுக்கும், குழந்தைக்கும் எது சரியாக இருக்குமோ அதை செய்யுங்கள். உங்களின் முடிவுகளுக்காக யாரும் உங்களை அசிங்கப்படுத்தவிடாதீர்கள். யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டியது இல்லை. உங்களின் உடம்பு மற்றும் தாய்மை சொல்வதை கேளுங்கள் எனகிறார் ஸ்ருதி.