ஹைலைட்ஸ்:

  • பிரதமர் மோடியை சந்தித்த ரஜினி
  • குடியரசுத் தலைவரை சந்தித்து பேசிய ரஜினி

டெல்லியில் நடந்த 67வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்ற ரஜினியால் கோலிவுட்காரர்கள் பெருமை அடைந்திருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் பலரும் ரஜினியை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியிருக்கிறார் ரஜினி. அவருடன் மனைவி லதாவும் சென்றிருக்கிறார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு ரஜினி கூறியிருப்பதாவது,

மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும், பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி என்றார்.
இதற்கிடையே ரஜினியை வாழ்த்து கவிப்பேரரசு போட்ட ட்வீட் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்த ட்வீட்டில் அவர் கூறியதாவது,

தாதா சாகேப் பால்கே விருதுக்கு கமல், பாரதிராஜா, இளையராஜாவுக்கும் தகுதி இருக்கு: வைரமுத்துபால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.

கமல்ஹாசன் – பாரதிராஜா – இளையராஜா என்று
பால்கே விருதுக்குத்
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம் என்றார்.