ஹைலைட்ஸ்:

  • கைது குறித்து யுவிகா சவுத்ரி பேட்டி
  • பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசியதாக வழக்கு

பாலிவுட் படங்களில் நடித்து வரும் யுவிகா சவுத்ரி இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் கலந்து கொண்டார். அவர் பட்டியலின மக்களை பற்றி தரக்குறைவாக பேசிய வீடியோ வெளியாகி வைரலானது.

இதையடுத்து ஹரியானா மாநிலத்தில் யுவிகா சவுத்ரி மீது புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் யுவிகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்கள். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

மீரா மிதுன் போன்று பட்டியலின மக்களை விளாசிய பிக் பாஸ் பிரபலம் கைதுஇந்நிலையில் கைது விவகாரம் குறித்து யுவிகா கூறியதாவது,

என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதே அண்மையில் தான் தெரியும். எனக்கு நோட்டீஸ் வந்தபோது நான் புனேவில் ஷூட்டிங்கில் இருந்தேன். உடனே அனைத்தையும் விட்டுவிட்டு விசாரணைக்காக சென்றேன்.

சட்டத்தை மதிப்பவள் தான். அதனால் தான் உடனே ஹரியானாவுக்கு சென்றேன். போலீசார் என்னிடம் பல கேள்விகள் கேட்டார்கள். அந்த வீடியோ அப்லோடு செய்யப்பட்ட போன் கூட போலீசாரிடம் இருந்தது. தற்போது மும்பைக்கு திரும்பி வந்துவிட்டேன்.

விரைவில் அனைத்தும் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். நாட்டில் நிறைய முக்கிய விஷயங்களுக்கு தீர்வு தேவை. ஆனால் பிரபலமாக இருப்பதால் இப்படி ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

நான் யாரையும் குறிப்பிட்டு அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை என்று ஆறு மாதங்களுக்கு முன்பு தெரிவித்தேன். அப்பொழுது எனக்கு அந்த வார்த்தையின் அர்த்தம் கூட தெரியாது என்றார்.