ஹைலைட்ஸ்:

  • நடிகர் அரவிந்த் திரிவேதி காலமானார்
  • ராமாயணம் சீரியல் மூலம் பிரபலமானவர் அரவிந்த் திரிவேதி

ராமானந்த் சாகர் இயக்கத்தில் டிவியில் ஒளிபரப்பான ராமாயணன் தொடர் சூப்பர் ஹிட்டானது. அந்த தொடரில் ராவணனாக நடித்து பிரபலமானவர் அரவிந்த் திரிவேதி. அவர் குஜராத்தி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். 40 ஆண்டுகளாக குஜராத்தி திரையுலகில் பணியாற்றினார்.

இந்நிலையில் அரவிந்த் திரிவேதி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 82.

இது குறித்து அரவிந்தின் உறவினரான கஸ்துப் திரிவேதி கூறியதாவது,

அவருக்கு சில காலமாகவே உடல்நலம் சரியில்லை. நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகு பல்வேறு உறுப்புகள் செயல் இழந்தன என்றார்.

அரவிந்த் திரிவேதியின் இறுதிச் சடங்கு இன்று காலை மும்பையில் நடந்தது. அரவிந்த் திரிவேதியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

அவர் இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் சுமார் 300 படங்களில் நடித்தவர். மேலும் 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை எம்.பி.யாக இருந்திருக்கிறார். சபர்கதா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் அரவிந்த் திரிவேதி.

இயக்குநர் விஜய் ஆனந்த் ராஜினாமா செய்த பிறகு சென்சார் போர்டின் தலைவராக இருந்தார் அரவிந்த். கடந்த ஆண்டு லாக்டவுனின்போது ராமாயணம் சீரியல் மறுஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வயதான காலத்தில் காதலருடன் ஓட்டம் பிடித்த அப்பத்தா: அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள்

ஏர்போர்ட்டை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிய முன்னணி நடிகை!