ஹைலைட்ஸ்:

  • கண்டசாலா ரத்னகுமார் மாரடைப்பால் மரணம்
  • ரத்னகுமார் மரண செய்தி அறிந்த பிரபலங்கள் அதிர்ச்சி

பிரபல பாடகர் கண்டசாலா வெங்கடேஸ்வரராவின் இரண்டாவது மகனான கண்டசாலா ரத்னகுமார் ஒரு பிரபலமான டப்பிங் கலைஞராவார். அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழி படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். சுமார் 1,500 படங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.

மேலும் பல சீரியல்களுக்கும் டப்பிங் பேசியிருக்கிறார். இது தவிர்த்து 50 ஆவண படங்களுக்கும் டப்பிங் பேசியிருக்கிறார். தொடர்ந்து 8 மணிநேரம் டப்பிங் பேசி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது அண்மையில் தெரிய வந்தது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகிய ரத்னகுமார் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அவருக்கு அண்மை காலமாக உடல்நல பிரச்சனை இருந்தது வந்தது. சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக டயாலிசிஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

ரத்னகுமார் இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ரத்னகுமாரின் குடும்பத்தாருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

40 ஆண்டுகளாக டப்பிங் பேசிய ரத்னகுமார் ஏகப்பட்ட ஹீரோக்களுக்கு குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னாது, ஸ்ருதி ஹாசனுக்கு கல்யாணமாகிடுச்சா!?!