ஹைலைட்ஸ்:

  • தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியராக இருக்கும் சின்னி ஜெயந்த் மகன்
  • சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதனை வாழ்த்தும் சினிமா ரசிகர்கள்

80கள், 90களில் தமிழ் திரையுலகின் பிசியான நகைச்சுவை நடிகராக இருந்தவர் சின்னி ஜெயந்த். அவர் ஹா என்று தன் ஸ்டைலில் சொல்வதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

சின்னி ஜெயந்துக்கு ஸ்ருதன் ஜெய் நாராயணன் என்ற மகன் இருக்கிறார். தன் மகனை தன்னை போன்றே நடிகராக்க வேண்டும் என்று சின்னி ஜெயந்த் நினைக்கவில்லை. மாறாக ஸ்ருதன் தன் இஷ்டப்படி கெரியரை தேர்வு செய்யட்டும் என்று விட்டுவிட்டார் சின்னி ஜெயந்த்.

படிப்பில் கெட்டிக்காரரான ஸ்ருதன்(26) கடந்த 2019ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அதில் 75வது ரேங்க் வாங்கியிருந்தார்.

ஐஏஸ் பிரிவை தேர்வு செய்த ஸ்ருதன் தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியராக பயிற்சி பெற்று வருகிறார். அவர் கடந்த 3 மாதங்களாக பயிற்சி பெற்று கொண்டிருக்கிறார்.

ஸ்ருதன் உதவி ஆட்சியராக பயிற்சி பெறுவது குறித்து அறிந்த சமூக வலைதளவாசிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் சின்னி ஜெயந்துக்கு இதை விட பெருமை வேறு என்ன இருக்க முடியும் என்று கூறி அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

முன்னதாக மகன் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் அதை ரஜினிக்கு போன் செய்து தெரிவித்தார் சின்னி ஜெயந்த். ரஜினி ஸ்ருதனை மனதார பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடப்பாவமே, கல்யாணம் முடிந்த மறுநாளே சினேகன் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பமா!