ஹைலைட்ஸ்:

  • நடிகர் திலீப் குமார் மரணம்
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திலீப் குமார் காலமானார்
  • திலீப் குமார் மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல்

பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமாருக்கு வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், வீடு திரும்புவதுமாக இருந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே மும்பையில் இருக்கும் இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஒரு வாரத்திற்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நலம் குறித்து மனைவி சாய்ரா பானு அவ்வப்போது ட்விட்டரில் அப்டேட் கொடுத்து வந்தார்.

திலீப் சாப் நன்றாக இருக்கிறார். அவர் விரைவில் வீடு திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள் என்று திங்கட்கிழமை கோரிக்கை விடுத்தார் சாய்ரா பானு. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திலீப் குமார் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 98.

திலீப் குமாரின் மறைவு குறித்து அறிந்த திரையுலக பிரபலங்களும், சினிமா ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

திலீப் குமார் மறைந்தாலும் அவரின் படங்கள் மூலம் நிலைத்து இருப்பார் என்கிறார்கள் ரசிகர்கள். மேலும் திலீப் குமார் நடித்த படங்களின் வீடியோக்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே தமிழ் சினிமா ரசிகர்களோ ஆர்யாவின் மனைவி சயீஷாவுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்கள். திலீப் குமாரின் உறவினர் தான் சயீஷா என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகையின் கணவர் மாரடைப்பால் மரணம்: போகும் வயதா இது இயக்குநரே!