லாக்டவுன் நேரத்தில் நிஷா ராவல் வெளியிட்ட படுக்கையறை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கரண் மெஹ்ரா

இந்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் கரண் மெஹ்ராவும், நிஷா ராவலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு 4 வயதில் கவிஷ் என்கிற மகன் இருக்கிறார். இந்நிலையில் கரண் தன்னை அடித்து மண்டையை உடைத்ததாக நிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நிஷாவின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கரணை நள்ளிரவில் கைது செய்தனர். மறுநாள் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

நிஷா வீடியோ

முதல்முறை லாக்டவுன் அமல்படுத்தப்பட்டபோது நிஷாவும், கரணும் சேர்ந்து தங்கள் வீட்டு படுக்கையறையில் வீடியோ ஒன்றை எடுத்தனர். அந்த வீடியோவை எடிட் செய்து 7 வாரங்களுக்கு முன்பு நிஷா ராவல் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார். இந்நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. நல்லாத் தானே இருந்தீர்கள், ஏன் இப்படி பிரச்சனை ஏற்பட்டது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

javascript-Instagram

பொய்

நிஷாவை தான் அடிக்கவில்லை என்றும், மாறாக அவரின் சகோதரர் தான் தன்னை தாக்கியதாகவும் கரண் மெஹ்ரா தெரிவித்துள்ளார். என்ன செய்கிறேன் பார் என்று என்னிடம் கோபமாக சொல்லிவிட்டு சென்ற நிஷா சுவரில் தலையை மோதியதில் காயம் ஏற்பட்டது. ஆனால் நான் அடித்து காயப்படுத்தியதாக போலீசில் பொய் புகார் அளித்து என்னை கைது செய்ய வைத்துவிட்டார் என்று கரண் மெஹ்ரா கூறியுள்ளார்.

கள்ளத்தொடர்பு

கரண் மெஹ்ராவுக்கும், டெல்லியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக நிஷா ராவல் கூறுகிறார். அவர் மேலும் கூறியதாவது, அந்த உறவு குறித்து தெரிய வந்து கரணிடம் கேட்டபோது, நான் அந்த பெண்ணை காதலிக்கிறேன் என்றார். கடந்த 14 ஆண்டுகளில் கரணின் நடவடிக்கைகளை பார்க்கும்போது இது ஒன்றும் புதிது இல்லை. அவரின் இமேஜ் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். நாங்கள் இருவரும் படங்கள், சீரியல்களில் நடிப்பதால் இந்த பிரச்சனை எல்லாம் வெளியே தெரிந்தால் கெரியர் பாதிக்கப்படும் என்று பயந்தேன். எங்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஒவ்வொரு முறையும் கரண் மன்னிப்பு கேட்கும்போது நான் சரி என்று சொல்லிவிடுவேன். அவரை நம்பினேன். ஆனால் அவர் என்னை அடிக்கத் துவங்கினார். அதை ஏற்க முடியாது என்றார் நிஷா.