தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி, நடிகராக உயர்ந்து தற்போது இயக்குநராக வலம் வருபவர் நடிகர் பிரபுதேவா. இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் தொடர்ச்சியாக படங்களை இயக்கி வருகிறார். பிசியாக படங்கள் இயக்கி வந்தாலும், தனக்கு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமாகி தற்போது நடிகராக படங்களில் நடித்து வருபவர் பா.விஜய். பாடலாசிரியராக பல சூப்பர் ஹிட் பாடல்களை தந்த அவரால், நடிகராக ஜொலிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து மீண்டும் பாடல்கள் எழுதுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்நிலையில் இயக்குனராக புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் பா.விஜய்.

எம்எஸ் மூவிஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் பா.விஜய். பிரபுதேவா, மகிமா நம்பியார் நடிக்கும் இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LOL – எங்க சிரி பாப்போம்: மறைந்த நடிகர் விவேக்கின் காமெடி ரியாலிட்டி ஷோ!
பிரபுதேவா தற்போது இயக்கத்தை விட்டு முழுவதுமாக நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அண்மையில் ‘குலேபகாவல்லி’ இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார் பிரபுதேவா. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.

பிரபு தேவா நடிப்பில் ஏற்கனவே பொன்மாணிக்கவேல், யங் மங் சங், பஹீரா உள்ளிட்ட படங்கள் தயாராகி ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கின்றன. இதில் பொன் மாணிக்கவேல் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.அதேபோல் ஹரஹர மஹாதேவகி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பொய்க்கால் குதிரை என்ற படத்திலும் நடிக்கவுள்ளார் பிரபுதேவா. இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.