மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராஜீவ் மேனனின் அம்மாவும், பிரபல பின்னணி பாடகியுமான கல்யாணி மேனன் உடல்நலக்குறைவால் காலாமானார். அவருக்கு வயது 80.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி மேனன். பிரபல பின்னணி பாடகியான இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 1973ம் ஆண்டு அபலா என்ற படம் மூலமாக பின்னணி பாடகியாக அறிமுகமான கல்யாணி, தமிழில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

மலையாளத்தில் அதிக பாடல்களைப் பாடியுள்ள கல்யாணி மேனன், ஷங்கரின் ‘காதலன்’ படத்தில் ’இந்திரையோ இவள் சுந்தரியோ’, ரஜினிகாந்த்தின் ‘முத்து’ படத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘குலுவாலிலே’, ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ‘ஓமணப் பெண்ணே’ உள்ளிட்ட பல பாடல்களை சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். கடைசியாக தமிழில் 96 படத்தில் இடம் பெற்ற காதலே காதலே பாடலை பாடியிருந்தார் கல்யாணி.

‘ஆகாஷ் வாணி’ வெப் தொடரில் இணையும் பிக்பாஸ் கவின் – ரெபா ஜான்!
இந்நிலையில் 80 வயதான கல்யாணி உடல்நல பிரச்சனை காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மதியம் காலமானார் கல்யாணி. அவரின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கல்யாணியின் இறுதிச்சடங்கு நாளை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.