ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படம் மூலம் பிரபலமானவர் பிரபாஸ். இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ள நடிகர் பிரபாஸின் 25-வது படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இந்தப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கபிர் சிங்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள சந்தீப், பிரபாஸின் 25-வது படத்தை இயக்குகிறார். இந்திய அளவில் உருவாகும் ‘ஸ்பிரிட்’ படத்திற்காக முன்னெப்போதும் திரையில் வந்திராத கதைக்களம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளார் சந்தீப்.

‘சலார்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ படங்களில் தற்போது நடித்து வரும் பிரபாஸ், ‘புரோஜெக்ட் கே’ எனும் திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவரது 25-வது படமான ‘ஸ்பிரிட்’ படப்படிப்பு அடுத்த வருடம் துவங்கவுள்ளது.

வந்தான்.. சுட்டான்.. ரிப்பீட்டு.. இது சிம்பு வெர்ஷன்மா: வைரலாகும் ‘மாநாடு’ டப்பிங் வீடியோ!
‘சாஹோ’, ‘ராதே ஷியாம்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ ஆகிய படங்களுக்காக பிராபஸுடன் கைகோர்த்த டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட், யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து ‘ஸ்பிரிட்’ படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 8 மொழிகளிலும் இந்தப்படம் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

படம் ரிலீஸ் பண்ண விடமாற்றங்க.! புலம்பி தள்ளிய ப்ளூ சட்டை மாறன்