இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் தேஜாவை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கி விட்டன. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதில் பலரின் பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனிடம் பெஸூ வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் நடிப்ப்பில் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 திரைப்பட தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால், அப்படத்தை பாதியிலேயே விட்டு, தெலுங்கில் ராம் சரணை இயக்கும் வேலையை ஆரம்பித்தார் ஷங்கர். இடையில் தனது அந்நியன் படத்தை ரன்வீர் சிங் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளையும் ஆரம்பித்தார். இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தை முடிக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்க கூடாது என்ற சர்ச்சைகள் எல்லாம் எழுந்தன.

வழக்கு, சர்ச்சைகள் எல்லாம் தற்போது அடங்கிய நிலையில் ராம்சரண் நடிப்பில் தெலுங்கில் தான் இயக்கும் திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளை ஷங்கர் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் நாயகியாக நடிப்பதில் ஆலியா பட, கீரா அத்வானி பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது மாளவிகா மோகனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.

மாஷா அல்லாஹ்: ‘மாநாடு’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதியை வெளியிட்ட யுவன்!
2013 ஆம் ஆண்டு வெளியான பட்டம் போலே என்ற மலையாளப் படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன், ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் சசிக்குமார் ஜோடியாக நடித்தார். அண்மையில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு நடித்தார். தற்போது இந்தியில் ஒரு படத்திலும், தனுஷுடன் D43 திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் மாளவிகா மோகனன்.

இந்நிலையில் ஷங்கர் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராம்சரண் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிப்பது உறுதியாகிவிட்டால், இதுதான் அவரது முதல் தெலுங்கு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.