ஹைலைட்ஸ்:

  • பிரேம்ஜி திருமணம் குறித்து சூப்பர் பதில் சொன்ன ஆர்த்தி
  • LOL எங்க சிரி பார்ப்போம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேம்ஜி அமரன்

LOL எங்க சிரி பார்ப்போம் நிகழ்ச்சி ஆகஸ்ட் 27ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது. அந்த நிகழ்ச்சியை சின்ன கலைவாணர் விவேக்கும், அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவும் சேர்ந்து தொகுத்து வழங்கியிருக்கிறார்கள்.

ஆர்த்தி, பிரேம்ஜி அமரன், சதீஷ், குக் வித் கோமாளி புகழ், அபிஷேக், மாயா கிருஷ்ணன் உள்பட 10 பேர் போட்டியிட்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியிலும் பிரேம்ஜி அமரனுக்கு எப்பொழுது திருமணம் என்று பேசப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் LOL எங்க சிரி பார்ப்போம் நிகழ்ச்சி குறித்து நம்மிடம் பேசிய ஆர்த்தி, விவேக் மற்றும் பிரேம்ஜி பற்றி கூறியதாவது,

விவேக் சாருடன் சேர்ந்து 13 படம் பண்ணியிருக்கிறேன். ஆனால் ஷூட்டிங்ஸ்பாட்டில் பார்த்ததை விட அப்படி ஒரு பதட்டமாக இருந்தார். நான் ஓடிடியில் முதல் முறை வேலை செய்கிறேன். ஓடிடியில் ரியாலிட்டி ஷோ பண்ணும் முதல் காமெடியன் நானாகாத் தான் இருப்பேன். அதனால் இந்த ஷோ நல்லா வரணும், நல்லா பண்ணனும் என்றார்.

அவர் வேற லெவல் எனர்ஜியுடன் இருந்தார். அனைவரையும் செமயா ஊக்குவித்தார். தான் ஒரு சீனியர் என்று இல்லாமல், நிறைய டிப்ஸ் கொடுத்தார். அவர் இந்த ஷோவை அடுத்த லெவலுக்கு கொண்டு போனார். நாங்கள் 10 பேரும் ஆறு மணிநேரம் போராடினோம் என்றால் அதற்கு காரணம் விவேக் சார் கொடுத்த பாசிட்டிவ் வைப்ஸ் தான். இந்த ஷோ முழுக்க பாசிட்டிவிட்டி இருக்கு என்றார்.

பிரேம்ஜி அமரனுக்கு எப்பொழுது கல்யாணம் என்று அவரிடம் கேட்டீர்களா என்கிற கேள்விக்கு ஆர்த்தி கூறியதாவது,

கூடிய சீக்கிரம் ஆகப் போகுது, நம்ம புகழோட என்று கூறி சிரித்தார்.

ஆண்டவர் வீட்டில் விசேஷம்: ஒன்று கூடிய குடும்பம், வருத்தத்தில் ஸ்ருதி ஹாசன்