ஜெயம் ரவி நடித்த ‘பூமி‘ , சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை நிதி அகர்வால். இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக திகழ்கிறார். இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாள் அன்று நிதி அகர்வால் செய்த காரியம் ரசிகர்களை நெகிழ செய்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் நிதி அகர்வால். அப்போது, ஆதரவற்றோர் முதியோர் இல்லம் சென்று அவர்களுடன் பேசி கைக்குலுக்கி மகிழ்ந்து, கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். நிதி அகர்வாலின் இந்த செயல் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதோடு, அங்குள்ள முதியோர்களுக்கும் மன நலம் குன்றியவர்களுக்கும் தனது கையாலே உணவு பரிமாறி மகிழ்ச்சியூட்டி இருக்கிறார். மேலும் அங்கே கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நிதி அகர்வால். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரின் இந்த செயலை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

‘சாணிக் காயிதம்’ படப்பிடிப்பை நிறைவு செய்த செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ்!
நிதி அகர்வால் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் ’வீரமல்லு’ படத்தில் நாயகியாக பஞ்சமி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.