தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக திகழ்பவர் நடிகை அமலா பால். அன்மைகாலாமாக கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், கவர்ச்சி காட்டுவதிலும் எல்லை தாண்டி விட்டார். இந்நிலையில் அமலா பாலின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகையாக கலக்கிய அமலா பால நேற்றைய தினம் தனது பிறந்த நாளை முன்னிட்டு, தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தன்னுடைய தயாரிப்பில் உருவாகி வரும் ‘கடாவர்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ‘கடாவர்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு, தயாரிப்பாளர் ஆனதற்கு அமலா பாலிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அக்‌ஷய் குமார்.

இது குறித்து அமலா பால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நான் இந்தத் துறையில் 12 வருடங்கள் / 144 மாதங்கள் / 4,380 நாட்களாக நடிகையாக இருக்கிறேன். என்னைச் செம்மைப்படுத்திய, பயனுள்ள 12 வருடங்களாக அவை இருந்தன. தற்போது புதிய வகை வேலையைச் செய்யக்கூடிய வகையில் றெக்கை முளைத்திருக்கிறது. நான் எனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குகிறேன்.

தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ரஜினி மகள்: காரணம் இதுதான்!
நீங்கள் ஒவ்வொருவரும் எனது இந்த முயற்சியில் எனக்கு ஆதரவாக இருப்பீர்கள் என்று நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. இந்தப் புதிய துறையில் ‘கடாவர்’ படத்துடன் நடை பழக ஆரம்பித்திருக்கிறேன். தடயவியல் துறை சம்பந்தப்பட்ட இந்த த்ரில்லர் படத்தில் அறுவை சிகிச்சை நிபுணர் என்கிற கதாபாத்திரம் மையமாக இருக்கும். இந்த முதல் பார்வை எனக்கு நானே கொடுக்கும் பரிசு. இந்த பிரபஞ்சம் எனக்காக வைத்திருக்கும் எல்லா அனுபவங்களுக்கும் நான் தயாராக இருக்கிறேன்”.

‘கடாவர்’ படத்தை அனூப் எஸ்.பணிக்கர் இயக்கியுள்ளார். இதில் அமலாபால் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராக நடித்துள்ளார். மேலும் அதுல்யா ரவி, ஹரிஷ் உத்தமன், ரித்விகா, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் பிணக்குவியல்களுக்கு நடுவில் அமலா பால் அமர்ந்திருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அறுவடைக்கு தயாரான மாநாடு ; தீபாவளி ரேஸில் பங்கேற்காதது ஏன ?