ஹைலைட்ஸ்:

  • நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
  • தமிழ் பெண்ணுக்கு ஆடை முக்கியம் எனும் ரசிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். கோலிவுட்டில் இருக்கும் அனைவரும் தனக்கு எதிராக சதி செய்வதாக அவ்வப்போது கூறி வருகிறார்.

விஜய், சூர்யாவை நெபடிசம் ப்ராடக்ட்டுகள் என்று கூறி விளாசினார். மேலும் த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா உள்ளிட்டோர் தன்னை காப்பியடிப்பதாக அவ்வப்போது புகார் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

தன் நண்பன் ஒருவருடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும் தன்னை பற்றி மோசமாக கமெண்ட் போடுபவர்களை திட்டுகிறார்.

அண்மை காலமாக மீரா மிதுன் தன் படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று தன் நிர்வாண புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

அந்த புகைப்படத்தை வெளியிட்டு அவர் காளியை பற்றி பேசியது தான் சினிமா ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளது.
அவர்கள் கூறியிருப்பதாவது,

நீங்கள் எப்படி இருந்தாலும் ஆபாச படத்தில் தான் நடிக்க முடியும். நீங்கள் விளம்பரம் தேட நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவதும், காளியும் ஒன்றா?. தயவு செய்து கடவுள் விஷயத்தில் விளையாடாதீர்கள் மீரா மிதுன்.

கோலிவுட்டில் யாரும் உங்களுக்கு எதிராக சதி செய்யவில்லை. நீங்கள் தான் அப்படி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். யாரும் உங்களை காப்பியடிக்கவும் இல்லை. ட்விட்டர் மூலம் தான் நீங்கள் இருப்பதே பலருக்கு தெரிகிறது என்று தெரிவித்துள்ளனர்.

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு நீதி வேண்டும் #JusticeForSushantSinghRajput என்கிற ஹேஷ்டேகை பயன்படுத்தியிருக்கிறார் மீரா. அதை பார்த்த சுஷாந்த் ரசிகர்களோ, யார் இந்த லட்கி என்கிறார்கள்.

இதற்கிடையே லாக்டவுன் நேரத்தில் தனக்கு தொல்லை கொடுக்கும் சிலர் மீது சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் இன்று புகார் அளிக்கப் போவதாக மீரா தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் ஹேண்டிலை மென்ஷன் செய்திருக்கிறார்.

மீனாவுக்கு ஏற்பட்டிருக்கும் விபரீத ஆசை: விஜய் சேதுபதி காரணமா?